பூக்களின் மருத்துவ குணங்கள்

நன்றி குங்குமம் தோழி

இயற்கையாகவே அழகும், மணமும் நிறைந்தவை மலர்கள். மனித உடலில் ஏற்படும் குறைகளுக்கு சில பூக்கள் மருத்துவ குணங்கள் உடையது.

செம்பருத்தி: தலை முடிக்கு சிறந்த மருந்தாகும். முடி செழிப்பாக வளர செம்பருத்தி பூவை உலர்த்தி அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் சிறந்த கண்டிஷனராக பயன்படுகிறது. மலச்சிக்கலை சரி செய்யும். ரத்த அழுத்தம், இதய படபடப்பு, வயிற்றுப் பிடிப்பு போன்றவைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

லாவெண்டர்: இதன் நறுமணம் உடலை ரிலாக்ஸாகவும், அஜீரணக் கோளாறுகளையும் சீர் செய்யும்.

செண்பகப்பூ: பருக்களுக்கு கிருமி நாசினியாக செயல்படுகிறது. கஷாயம் வைத்தோ, பாலில் கலந்தோ பருகினால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ேகாளாறுகளை குணப்படுத்தும்.

மல்லிகை: மன அழுத்தத்தை, நரம்பு சோர்வடைவதை தடுக்கும். மல்லிகைப்பூவில் உள்ள சாலிசிலிக் அமிலம், லினாநூல் நரம்புகளை ரிலாக்ஸ் ஆக வைக்கிறது. இது தாய்ப்பால் கெட்டியானால் மார்பகத்தில் வைத்துக் கட்டினால் சரியாகும்.

தாமரை: இதில் இருக்கும் லிநோலெய்க் அமிலத்தில் இரும்புச் சத்து, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்தும் நிறைந்துள்ளது. ஆயுர்வேத மருந்தாகவும், அஜீரணக் ேகாளாறு, இரைப்பைப் புண் போன்றவைகளுக்கு கஷாயம் வைத்து குடித்தால் விரைவில் குணமாகும். ரோஜா: பித்தம், மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் போன்றவைகளுக்கு ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை 2 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் அளவு சுண்டியதும் காலை, மாலை 7 நாட்கள் குடித்தால் பித்தம் முதல் அனைத்தும் நீங்கும்.

பன்னீர் பூ: இதனை பீங்கான் கப்பில் மட்டுமே ஊறவைக்க வேண்டும். தூக்கமின்மை, நரம்பு சோர்வு, ஆஸ்துமா, நீரிழிவு நோய்களை எதிர்த்து போராடும். தினமும் இரவில் 7 காய்களை நீரில் ஊறவைத்து காலையில் வடிகட்டி குடித்தால் சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.

சாமந்திப்பூ: இதனை கசாயம் செய்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். உடல் சூடு குறையும். இதழ்களை காயவைத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட உடல் சோர்வு நீங்கும்.

பவளமல்லி: இது நீரிழிவு நோய்க்கும், சிறுநீரகத்தை காக்கக்கூடிய மருத்துவத்தன்மை கொண்டது. வீட்டில் பவளமல்லி மரத்தில் பட்டு வீசும் காற்றும் உடல் ஆரோக்கியத்தை தரும்.

தொகுப்பு: எஸ்.மாரிமுத்து, சென்னை.

 

The post பூக்களின் மருத்துவ குணங்கள் appeared first on Dinakaran.

Related Stories: