திருச்சி: திருச்சியில் நேற்று நடந்த 2வது நாள் மல்லர் கம்பர் போட்டியில், தெலங்கானா வீராங்கனை தவறி விழுந்து படுகாயமடைந்தார். அண்ணா விளையாட்டு மைதான உள்ளரங்கில் மல்லர் கம்பம் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. இதில் நிலை மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம், தொங்கும் மல்லர் கம்பம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்து வருகிறது. ஜன. 24 வரை நடைபெறும் போட்டியில் தமிழகம், மகாராஷ்டிரா உள்பட 16 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 2வது நாளாக 16-17 வயதுள்ள மாணவிகளுக்கான மல்லர் கம்பம் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற 16 வயது தெலங்கானா வீராங்கனை கயிற்றில் தொங்கும் போட்டியில் பல்வேறு சாகசங்களை செய்து காட்டியதுடன், படிப்படியாக கயிற்றில் தொங்கியபடியே கீழே இறங்கினார். அப்போது கைப்பிடி நழுவி கீழே உள்ள மெத்தையில் விழுவதற்கு பதிலாக தரையில் எதிர்பாராத விதமாக விழுந்தார். இதில் அவரது கை எலும்பு முறிந்ததை அடுத்து, உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் போட்டி அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
The post திருச்சியில் 2ம் நாளாக மல்லர் கம்பம் தெலங்கானா வீராங்கனை தவறி விழுந்து படுகாயம் appeared first on Dinakaran.