மலாய் குல்பி

தேவையானவை:

பால் – 1 லிட்டர்,
கார்ன் ப்ளார் – 50 கிராம்,
சர்க்கரை பொடித்தது – 1 கப்,
க்ரீம் – 1 கப்,
ரோஸ் எசன்ஸ் – 6 துளி,
ஏலக்காய் – சிறிதளவு,
முந்திரி, பாதாம்,
பிஸ்தா – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது).

செய்முறை:

பாலை காய்ச்சி அதில் பாதி அளவு எடுத்து அதனுடன் கார்ன் ப்ளாரை சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும். மீதமுள்ள பாலில் சர்க்கரைச் சேர்த்து கலக்கவும். இந்த இரு பால் கரைசலையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்த விழுதுடன் கிரீம், எசன்ஸ், ஏலக்காய், பருப்பு வகைகள் கலந்து குல்பி மோல்டில் நிரப்பி, ஃபிரீசரில் வைத்து கலவை கெட்டியானவுடன் எடுத்து சாப்பிடலாம்.

The post மலாய் குல்பி appeared first on Dinakaran.