பேரீச்சம் பழக் குழம்பு

தேவையானவை:

கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் – 10,
உரித்த சின்ன வெங்காயம் – ½ கப்,
பூண்டு – 4 பல்,
தக்காளி – 2, கடுகு,
வெந்தயம் தலா – ½ டீஸ்பூன்,
புளி சிறிய எலுமிச்சை அளவு,
தேங்காய் துருவல் – ½ கப்,
முந்திரி – 5,
பச்சைமிளகாய் – 3,
மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்,
தனியா தூள்,
மிளகாய் தூள் – தலா 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – ேதவைக்கு.

செய்முறை:

பேரீச்சம் பழத்தில் சிறிது தண்ணீர் ேசர்த்து மைய அரைக்கவும். தேங்காய் துருவலுடன் முந்திரி, பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து அரைக்கவும். புளியை 1½ கப் வருமாறு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். புளிக்கரைசலை விட்டு அரைத்த பேரீச்சை விழுது, தேங்காய் விழுதுச் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தளதளவெனக் ெகாதித்ததும் கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கவும். இது புளிப்பும் தித்திப்புமாக அட்டகாசமான சுவையில் இருக்கும்.

The post பேரீச்சம் பழக் குழம்பு appeared first on Dinakaran.