பிரட் பீட்சா

டாப்பிங் செய்ய தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)
தக்காளி – 1/4 கப் (நறுக்கியது)
சிவப்பு குடைமிளகாய் – 1/4 கப் (நறுக்கியது)
சீஸ் – 1/4 கப் (துருவியது)
ஸ்வீட் கார்ன்- 1/4 கப்
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
சில்லி பிலேக்ஸ் – 1/2 ஸ்பூன்
டொமேட்டோ சாஸ் – 1 ஸ்பூன்
ஆலிவ் – 3 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
Italian seasoning – 1/2 ஸ்பூன்

பொருட்கள்:

பிரட் – 8 துண்டு
பட்டர் – தேவையான அளவு
டொமேட்டோ கெட்சப் – தேவையான அளவு

செய்முறை

ஒரு கிண்ணத்தில் டாப்பிங் செய்வதற்கு தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு நன்றாக மிக்ஸ் செய்து தனியாக எடுத்து வைக்கவும். இரண்டு பிரட் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அதனை வட்ட வடிவில் வெட்டி எடுத்து கொண்டு மற்ற பாகத்தை அகற்றி விடவும். ஒரு பிரட் துண்டை மட்டும் எடுத்து மற்றொரு சிறிய வட்ட வடிவில் வெட்டி, நடு பகுதியை நீக்கி விட்டு, மற்றொரு பிரெட் துண்டில் டொமெட்டோ சாஸ் தடவிஸ்ப்ரெட் செய்யவும்.

வெட்டி எடுத்துள்ள பெரிய பிரட் துண்டை அதன் மீது வைக்கவும். டாப்பிங்கை ப்ரெட்டின் மேற்பரப்பில் வைத்து கொஞ்சம் அழுத்தி விடவும். அதன் மீது கொஞ்சம் உருகிய பட்டர்ரை ஸ்ப்ரெட் செய்யவும் . ஓவன் இருந்தால் 180C/360F வெப்பத்தில் 10 நிமிடங்கள் வேக விடவும். இல்லையென்றால் தோசக் கல்லை நன்றாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். தயாராக இருக்கும் பிரட் பீசாவை வைத்து தீயை சிம்மில் வைத்து சீஸ் உருகும் வரை மூடி வைக்கவும். அவ்ளோதாங்க சுவையான, சுட சுட பிரெட் பீட்சா தயார்!

The post பிரட் பீட்சா appeared first on Dinakaran.