முட்டை மிட்டாய்

தேவையான பொருட்கள்

10 முட்டை
400 கிராம் – சர்க்கரை
400 கிராம் – கோவா
100 கிராம் – நெய்
50 கிராம் – பாதாம்
2 சிட்டிகை –
குங்குமப்பூ.

செய்முறை

முட்டையிலிருந்து வெள்ளை பகுதியை மட்டும் தனியாக ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இதோடு சர்க்கரையை சேர்த்து கை வைத்து நன்றாக சர்க்கரை கரையும் வரை கலக்கவும். கலந்ததும், கோவாவை சேர்த்து கட்டி இல்லாமல் கைகளால் கரைத்து விடவும். கடைசியில் குங்குமப்பூ பாதாம் விழுது மற்றும் நெய் விட்டு கலந்து விடவும். இந்த கலவையை அடுப்பில் வைத்து பத்து நிமிடங்கள் சிறு தீயில் குக் செய்யவும். அதன்பின் நெய் தடவிய டிரேயில் ஊற்றி நறுக்கிய பாதாமை மேலே தூவி பத்து நிமிடம் பிரீ ஹீட் செய்த ஓவனில் 160 டிகிரியில் அரைமணி நேரம் வைத்து எடுத்தால் முட்டை மிட்டாய் தயார்.

The post முட்டை மிட்டாய் appeared first on Dinakaran.