சிகப்பு கவுனி அரிசி ஸ்வீட்

தேவையான பொருட்கள்

சிகப்புகவுனி அரிசி – 2 கப்
தேங்காய்த்துருவல் – 1 கப்
சர்க்கரை – அரை கப்
ஏலக்காய்தூள் – கால் ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்
உப்புத்தூள்- தேவைக்கு.

செய்முறை

முதலில் தேங்காயைத் துருவி எடுத்துவைத்துக் கொள்ளவும். அதன்பின், சிகப்புகவுனி அரிசியை சுத்தம் பண்ணி அரைமணி நேரம் தண்ணீர் ஊற்றி வைக்கவும். பின், குக்கரில் அரிசிக்கு 3 பங்கு தண்ணீர் வைத்து 3 விசில் வந்ததும் 5 நிமிடங்கள் ‘சிம்மில்’ வைத்து ஆப் பண்ணவும். பின், வேறு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு தேங்காய் துருவல், சர்க்கரை போட்டு நன்கு கிளறி விடவும். பின், வேகவிட்ட கவுனி அரிசியைச் சேர்க்கவும். உப்புசேர்த்து நன்கு கலந்தாலே போதுமானது. கவுனி அரிசி ஸ்வீட் தயார்.

The post சிகப்பு கவுனி அரிசி ஸ்வீட் appeared first on Dinakaran.