மைலேறிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திய கோவை ஆட்சியர்

கோவை: மைலேறிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பாடம் நடத்தினார். கோயம்புத்தூர் ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக கள ஆய்வுகளை மேற்கொண்டு அனைத்து துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளின் கள நிலவரத்தை அறிந்து அதற்கு ஏற்றவகையில் செயல்பாட்டில் உள்ள பணிகளை துரிதப்படுத்தி வருகின்றார். அந்த வகையில், இன்று மதுக்கரை ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வு மேற்கொண்டபோது, மைலேறிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு நேராடியாக சென்று அங்கு பயிலும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது அறிவு தொடர்பாக பாடங்களை நடத்தி, வினாக்களை எழுப்பினார்.

இதில் உற்சாகமான மாணவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு புன்னகையுடன் பதில் வழங்கினர். மேலும், ஆங்கில பாடத்திலிருந்து குறிப்பிட்ட பங்கங்களை எடுத்து வாசிக்கும்படியும் அறிவுறுத்தினார். கேட்டவுடன் கரங்களை உயர்த்தி படித்த மாணவர்களுக்கு பாராட்டுக்களையம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துக்கொண்டார். மேலும், அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டடிங்களில் மாணவர்களை அழைத்து அதை காண்பித்து மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, மாணவ மாணவியர்களை விழிப்புணர்வு அடையச் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தலைமையாசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

The post மைலேறிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திய கோவை ஆட்சியர் appeared first on Dinakaran.

Related Stories: