லோக்சபா தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது: மார்ச் 2வது வாரம் தேர்தல் அட்டவணை.! மாநிலம் வாரியாக பிப்ரவரிக்குள் ஆலோசனை

புதுடெல்லி: லோக்சபா தேர்தலுக்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கிய நிலையில் மார்ச் 2வது வாரம் தேர்தல் அட்டவணை வெளியிட உள்ளது. வரும் பிப்ரவரிக்குள் மாநிலம் வாரியாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தும் வகையில் தலைமை தேர்தல் ஆணையம், அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வரும் மார்ச் இரண்டாம் வாரத்திற்கு முன்னதாக தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, வரும் ஓரிரு வாரங்களில் துணை ராணுவ தளபதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துள்ளது.

அதன்பின் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு சென்று, அந்தந்த மாநில விபரங்களை சேகரிக்க உள்ளது. மாநிலங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் பயணம், வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், அதன்பின்னர் தேர்தல் அட்டவணை மார்ச் இரண்டாவது வாரம் வாக்கில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் வாக்குப்பதிவை நடத்தி, மே மாதத்தில் தேர்தலை முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2019 பொதுத் தேர்தலானது, ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதேமாதிரி இந்த தேர்தலையும் 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post லோக்சபா தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது: மார்ச் 2வது வாரம் தேர்தல் அட்டவணை.! மாநிலம் வாரியாக பிப்ரவரிக்குள் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: