பருப்புப்பொடி

தேவையானவை:

துவரம் பருப்பு – ஒரு கப்
மிளகாய் வற்றல்-10
மிளகு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் உப்பை வாணலில் வறுக்கவும். பிறகு மிளகு, மிளகாய் வற்றல், துவரம் பருப்பு என ஒவ்வொன்றாக தனித்தனியே வறுக்கவும். மிக்சியில் நன்றாக ‘நைசாக’ அரைக்கவும். வீட்டில் அரைத்தால் நன்கு சலித்துவிட்டு மறுபடி அரைக்க வேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள வத்தக்குழம்பு சூப்பராக இருக்கும். ஆவக்காய் அருமையாக இருக்கும். சுடு சோற்றில் நிறைய நல்லெண்ணெய் விட்டு பருப்புப்பொடி போட்டு கலந்து சாப்பிடலாம். சோறு குழைந்திருந்தாலும் நன்றாக இருக்கும். உதிரியாய் இருந்தாலும் நன்றாக இருக்கும்.

The post பருப்புப்பொடி appeared first on Dinakaran.