பின்னர், தனது சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி அந்தப் பதிவை நீக்கினாலும், அவரது பொறுப்பற்ற நடவடிக்கையால் தேஜ் பிரதாப் கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் தள்ளி வைக்கப்படுவதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். இந்நிலையில், பிரபல தொலைக்காட்சிக்கு தேஜ் பிரதாப் யாதவ் அளித்த பேட்டியில், ‘கட்சியில் இருந்து நீக்கப்பட்டது எனக்கு வருத்தமளிக்கிறது. எனக்கு எதிராக சதி நடக்கிறது. நானே அடுத்த லாலு பிரசாத் யாதவ் என்பது எல்லாருக்கும் தெரியும்.
எனது குரல், பேச்சு, மக்களுடன் பழகும் விதம் என அனைத்தும் என் தந்தையைப் போலவே இருப்பதால், என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். மேலும், எனது தம்பி தேஜஸ்வி யாதவ் பீகார் முதல்வராவதற்கு எனது முழு ஆதரவும் உண்டு. நான் ஒரு ‘கிங் மேக்கராக’ இருக்க விரும்புறேன். கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும், எனது தொகுதிக்குச் சென்று மக்களுக்கு பணியாற்ற போகிறேன். எனது ஆதரவாளர்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.
The post என் தந்தையை போன்று இருப்பதால் நானே அடுத்த லாலு பிரசாத் யாதவ்: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேஜ் பேட்டி appeared first on Dinakaran.
