கேடிஎம் 200 டியூக்

கேடிஎம் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய 200 டியூக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பைக், தற்போதைய பிஎஸ்6 – 2 சுற்றுச்சூழல் விதி முறைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில்நுட்பம் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டும்தான் புதிய பைக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். மற்றபடி, இன்ஜின் மற்றும் தோற்றத்தில் மாற்றம் இல்லை.

இதில் உள்ள 199.5 சிசி லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், அதிகபட்சமாக 24.7 பிஎச்பி பவரையும் 19.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.92 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, பஜாஜ் பல்சார் என்எஸ் 200, ஹோண்டா ஹார்னெட் 2.0 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கேடிஎம் 200 டியூக் appeared first on Dinakaran.

Related Stories: