கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குப்பை பிரித்து எடுக்கும் முறையை ஜெர்மனி அமைச்சர் நேரில் ஆய்வு

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில், குப்பையை பிரித்து எடுக்கும் முறை குறித்து, ஜெர்மனி அமைச்சர் ஆய்வு செய்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குப்பையை பிரித்தெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று ஜெர்மனி சுற்றுச்சூழல் அமைச்சர் ஸ்டெபிலெம்கே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குப்பை கிடங்குகளில் கழிவுகள், குப்பையை பிரித்தெடுக்கும் முறை, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கழிவுகளை தனியாக பிரித்து எடுக்கும் முறை, மறுசுழற்சிக்கு பயன்படும் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து எடுத்து அதனை மீண்டும் மறுசுழற்சிக்கு அனுப்பும் வழிவகைகள், குப்பை பிரித்து எடுக்கும் முறைகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள் குறித்து சி.எம்.டி.ஏ. செயற்பொறியாளர் ராஜான்பாபு மற்றும் உதவி செயற்பொறியாளர் அமுதா ஆகிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, ஜெர்மனியை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிஎம்.டி.ஏ அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குப்பை பிரித்து எடுக்கும் முறையை ஜெர்மனி அமைச்சர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: