கிச்சன் டிப்ஸ்

  • பலகாரங்கள் செய்யும்போது சூடான எண்ணெயில், இஞ்சியைத்தட்டி அதை வறுத்தெடுத்தால் எண்ணெய் கசண்டு இருக்காது. பலகாரங்களும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
  • சர்க்கரைப் பாகு காய்ச்சும்போது சில துளிகள் எலுமிச்சம் பழச்சாறு விட்டால் பாகுமுறுகாமல் இருக்கும்.
  • கால்கிலோ வெங்காயம், கால் கிலோ தக்காளி, இவற்றைத் துண்டுகளாக நறுக்கி நாலைந்து காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து ப்ரிஜ்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால், தேவையானபோது இதை பயன்படுத்தி சைடிஷ், கிரேவி போன்றவற்றை விரைவில் தயாரித்துவிடலாம். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
  • பாகற்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், கொத்தவரை, கத்தரிக்காய் இவற்றை மோரில் உப்பு போட்டு வெயிலில் காயவைத்து எடுத்துக் கொண்டால் காய்கறி இல்லாத நாளில் பொரித்துச் சாப்பிடலாம்.

    எந்தவித வடகக் கூழானாலும் அதில் சிறிது நெய் கலந்துவிட்டால் பொரிக்கும்போது மணக்கும். எச். சீதாலட்சுமி, கேரளா.
  • உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, நறுக்கிய உருளைக்கிழங்கு வில்லைகள் மீது, சிறிதளவு பயத்தம்மாவைத் தூவி, பிறகு எண்ணெயில் பொரித்தால் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
  • வேர்க்கடலை சிக்கி செய்யும்போது சிறிது சாக்லெட் ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட் சேர்த்து செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
  • எலுமிச்சை ஜூஸ் செய்யும்போது, அதில் ஒரு துளி சோம்பு பவுடர் சேர்த்தால் வித்தியாசமான சுவையில், நல்ல மணத்துடன் ஜூஸ் இருக்கும்.கோதுமையை ஊறவைத்து பால் எடுத்து அல்வா செய்வது போல், கேழ்வரகையும் ஊறவைத்து பால் எடுத்து அல்வா செய்தால் சூப்பராக இருக்கும்.
  • புலாவ் அரிசியை ஒரு நிமிடம் கொதிக்கும் வெந்நீரில் போட்டு, பிறகு எடுத்து புலாவ், பிரியாணி செய்தால் குழையாமல் தனித்தனியாக, உதிரி உதிரியாக இருக்கும்.
  • மோர்க்குழம்பு கொதித்து வரும்போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றினால் மணமுடன் இருக்கும்.
  • முட்டைக் கோஸில் தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டுவிட்டால், சாப்பிடச் சுவையாக இருக்கும்.
  • அரைத்துவிட்ட சாம்பார் வைக்கும்போது, அரைக்க வேண்டிய பொருட்களுடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்து அரைத்தால் சாம்பார் சூப்பராக இருக்கும்.
  • பருப்புரசம் நுரைத்து வரும்போது, இரண்டு பச்சைமிளகாயை நீள வாக்கில் கீறிப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.
  • மோர்க்குழம்பு செய்யும்போது, பாதியளவு பெரிய நெல்லிக்காயை விதை நீக்கி, அரைத்துப் போட்டால் மோர்க் குழம்பு சூப்பராக இருக்கும் எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
  • தினமும் சேகரிக்கும் பால் ஆடையை வாரத்தில் ஒருநாள் இரவில் சிறிது தயிர் ஊற்றி உறைய வைத்து மறுநாள் காலை ஒரு சாதாரண சமையல் கரண்டியினால் சுழற்றிக் கொண்டிருந்தால் ஐந்தே நிமிடங்களில் வெண்ணெய் திரண்டுவிடும்.
  • மைதாவைக் கரைத்து தோசை வார்க்கும் முன் ஒரு வாணலியில் ஐந்தாறு கைப்பிடி முருங்கை இலையைப் பறித்து நெய்யில் பொரித்தெடுங்கள். கையால் நொறுக்கி மாவுடன் கலந்து மெல்லிய தோசைகளாய் வார்க்கவும். நல்ல மணமாகவும் நல்ல சுவையாகவும் இருக்கும்.
  • அடைக்கு ஊறப்போடும்போது, ஒரு கைப்பிடி அளவு கொள்ளை சேர்த்து ஊறப்போட்டு அரைத்தால் அடை சுவையாக இருக்கும். வாய்வுத் தொந்தரவும் இருக்காது
  • கொத்துமல்லித் துவையல் அரைக்கும்பொழுது, மிளகாய்க்குப் பதில் மிளகை வறுத்து வைத்து அரைத்தால் வித்தியாசமான மணம் இருப்பதுடன் சுவையும் கூடுதலாகும். கவிதா, கோவிலாம்பூண்டி.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: