கேரள வியாபாரிகள் வருகை குறைவு: பொள்ளாச்சி சந்தையில் ஆடு விற்பனை மந்தம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒருபகுதியில், வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இதில், மாட்டுச்சந்தை கூடும்போது அதன் அருகே ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.ஆடுகளை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகம் வருகின்றனர். கடந்த மாதம் துவக்கத்தில் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது. மேலும் கேரள வியாபரிகள் வருகையால், ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானது. அதன்பின் கார்த்திகை மாதம் துவங்கியதால் ஆடு விற்பனை சற்று மந்தமானது. குறிப்பாக இந்த வாரத்தில், இன்று நடந்த சந்தை நாளில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறியாடு என 300க்கும் குறைவான ஆடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

மேலும், சபரிமலை சீசன் என்பதால், கேரளாவில் இருந்து வியாபாரிகள் வருகை குறைந்ததுடன், ஆடுகள் விற்பனை மந்ததமாக இருந்ததால் குறைவான விலைக்கு போனது. இதில், 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6500 வரையிலும், 25 கிலோ எடை கொண்ட பெரிய ஆடு ஒன்று ரூ.16 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post கேரள வியாபாரிகள் வருகை குறைவு: பொள்ளாச்சி சந்தையில் ஆடு விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Related Stories: