கீழடி நாகரிகத்தை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும்: மதுரை திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேச்சு

மதுரை: கீழடி நாகரிகத்தை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என மதுரை திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார். கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க மறுத்த ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருச்சி சிவா எம்.பி.; ஆதாரங்களின் அடிப்படையில் கீழடி நாகரிகத்தை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சேது பால திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்திருக்கும். உலகின் மூத்த மொழிகளில் முதன்மையான மொழி தமிழ் மொழி. கீழடி அகழாய்வை அமர்நாத் ராமகிருஷ்ணன் 2015ல் தொடங்கினார் . 3 ஆண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பி அறிக்கை அளிக்கப்பட்டது. திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணனை ஒன்றிய அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. தமிழ்நாட்டின் மீது ஒன்றிய பாஜக அரசு பண்பாட்டு படையெடுப்பை நடத்துகிறது.

ஒன்றிய அரசு நம் மீது தொடுப்பது பண்பாட்டுப் போர், கருத்தியல் போர், கலாச்சாரப் போர். கீழடி அறிக்கையை ஏற்காவிட்டால் ஒன்றிய பாஜக ஸ்தம்பிக்கச் செய்வோம். என்று கூடினார்.

The post கீழடி நாகரிகத்தை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும்: மதுரை திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: