கீர்த்தி சக்ரா விருது பெற்ற மறைந்த ராணுவ கேப்டன் மனைவி குறித்து அவதூறு: டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் 26ஆவது பஞ்சாப் படைப் பிரிவில் சியாச்சின் பகுதியில் மருத்துவ அதிகாரியாக இருந்தவர் கேப்டன் அன்ஷுமான் சிங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 19 ம் தேதி வீரமரணம் அடைந்தார். அவரது தியாகத்தைப் போற்றும் வகையில், அவரது மனைவி ஸ்மிருதி சிங்குக்கு ‘கீர்த்தி சக்ரா’ விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்நிலையில், கேப்டன் அன்ஷுமான் சிங்கின் தந்தை ரவி பிரதாப் சிங் கூறுகையில், ‘ராணுவத்தில் பணியாற்றிய எனது மகன், தனது அசாத்திய துணிச்சலுக்காக கீர்த்தி சக்ராவைப் பெற்றார்.

ஆனால் அந்த விருதை ஒருமுறை கூட நாங்கள் தொட்டுக் கூட பார்க்கவில்லை எனவே, மரணமடையும் ராணுவ வீரர்களின் நெருங்கிய உறவினர் அல்லது வாரிசு தொடர்பான சட்ட விதியில் மாற்றம் செய்ய வேண்டும்’ என்றார். இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்மிருதி சிங் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை பதிவு செய்தார். இதன் தொடர்ச்சியாக டெல்லியைச் சேர்ந்த அந்த நபரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post கீர்த்தி சக்ரா விருது பெற்ற மறைந்த ராணுவ கேப்டன் மனைவி குறித்து அவதூறு: டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: