கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

சென்னை: கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பெங்களூர் புறப்பட்டு செல்கிறார். நாளை அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகளில் 135 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இதனால் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது. தொடர்ந்து கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் மேலிடம் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில் கர்நாடக அமைச்சரவை பதவியேற்கும் விழா 20ம் தேதி பகல் 12.30 மணியளவில் பெங்களூருவில் நடக்கிறது. இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக நேற்று அழை ப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பெங்களூருக்கு புறப்பட்டு செல்கிறார். நாளை அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.

The post கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: