காரைக்கால் மாவட்ட விவசாயிகள் பருத்தி பயிரை காப்பீடு செய்ய வேண்டும்: கூடுதல் வேளாண் இயக்குநர் வேண்டுகோள்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட விவசாயிகள் பருத்தி பயிரை காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என்று கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட கூடுதல் வேளாண்மை துணை இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:சாகுபடி செய்துள்ள தங்களது பருத்தி பயிரை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டகொள்ளப்படுகிறார்கள்.

இத்திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு கூடிய பங்களிப்பை மாநில அரசே செலுத்துகிறது. விவசாயிகளின் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்ய விவசாயிகள் நடப்பு பருவத்தில் தங்களால் 31.3.2023 வரை சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிரை வரும் 30ம்தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கான விண்ணப்பத்தை தங்கள் பகுதி வேளாண்துறையின் உழவர் உதவியகங்கள் மூலமோ அல்லது agr.py.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்தலாம்.

விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களான வருவாய்துறை மூலம் பெறப்பட்ட நடப்பு பருவ சாகுபடி சான்றிதழ், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து உழவர் உதவியகத்தில் அளிக்க வேண்டும். இத்தகைய விண்ணப்பமானது உழவர் உதவியக அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு சான்று வழங்கியவுடன் அதனை விவசாயிகள் பெற்றுக் கொண்டு தங்கள் பகுதியில் செயல்படும் பொது சேவை மையங்கள் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு பதிவு செய்வதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் தாங்கள் காப்பீடு செய்த பயிர் விவரம், நில அளவு, தொகை போன்றவற்றின் விவரங்களை நேரடியாக சரிபார்த்து கொள்ளமுடியும். எனவே, மேற்கண்ட வழிமுறைகளில் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் தங்களது நடப்பு பருத்தி பயிரை காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காரைக்கால் மாவட்ட விவசாயிகள் பருத்தி பயிரை காப்பீடு செய்ய வேண்டும்: கூடுதல் வேளாண் இயக்குநர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: