இந்த மனு மீது இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த போது, சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என கர்நாடக சேம்பரை கண்டித்தனர். அப்போது, வன்முறை கும்பல் மிரட்டியதன் காரணமாகவே படத்தை வெளியிடவில்லை என்று கர்நாடக பிலிம் சேம்பர் தெரிவித்தது. இதற்கு நீதிபதிகள், “அழுத்தத்துக்கு அடிபணிந்து படத்தை வெளியிடாமல் இருப்பதா?; போலீசிடம் செல்லாதது ஏன்? என காட்டமாக கேள்வி எழுப்பினர். மேலும் வன்முறை கும்பலின் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பதாக கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ” கமல் பேசியது அவதூறாக இருந்தால் அவதூறு வழக்குதான் தொடர்ந்திருக்க வேண்டும். கமல் மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற கேள்வி எங்கிருந்து எழுகிறது. ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவதுகூறினால் கூட உணர்வுகள் புண்படுகின்றன எனக்கூறி நாசவேலைகள் நடக்கின்றன, நாம் எங்கே எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்?. நாளை இதே போன்று ஒரு நாடகத்துக்கு எதிராகவோ, கவிதைக்கு எதிராகவோ கும்பல்கள் மிரட்டல் விடுக்கக்கூடும். இதனை அனுமதிக்க முடியாது.‘தக் லைப்’ திரைப்படம் வெளியிடுவதற்கு கர்நாடக அரசு முழு பாதுகாப்பை அளிக்க வேண்டும்; வன்முறைகள் ஏற்பட்டால் அரசு அடக்க வேண்டும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்.”இவ்வாறு தெரிவித்தனர்.
The post கமல் பேசியது அவதூறாக இருந்தால் அவதூறு வழக்குதான் தொடர வேண்டும்.. ‘Thug Life’ படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.
