கலைஞரின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்பட்டன: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞரின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்பட்டன என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்களை கலைஞர் எழுதியுள்ளார். 15 புதினங்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகளை கலைஞர் படைத்துள்ளார். கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 54 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. நெஞ்சுக்கு நீதி என்னும் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.1957 முதல் 2018 வரை சட்டமன்றத்தில் கலைஞர் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

The post கலைஞரின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்பட்டன: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: