பாகிஸ்தானின் உத்தரவின்பேரில் இந்த சமீபத்திய நாடகம் உலகளாவிய தீவிரவாதத்தின் மையமாக உள்ள அதன் பங்கிற்கு பொறுப்பேற்பதில் இருந்து தப்பிப்பதற்கான மற்றொரு முயற்சியாகும். நடுவர் மன்றத்தின் நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள இரண்டு நீர்மின் திட்டங்கள் தொடர்பான நடுவர் மன்ற தீர்ப்பை வரவேற்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நடுவன் மன்ற தீர்ப்பானது பெரிய சட்ட வெற்றி. இந்தியா ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தை இடைநிறுத்தவோ அல்லது ஓரங்கட்டவோ முடியாது என்பதற்கான தெளிவான செய்தி. சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான பிரச்னைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post நீர்மின் திட்டப் பிரச்னை பாக்.கிற்கு ஆதரவாக தீர்ப்பு: சர்வதேச நடுவர் மன்ற உத்தரவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.
