இஸ்ரேலுக்கு ஆதரவாக உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளைச் சேர்ந்த யூத அமைப்புகள் ஐ.நா.விற்கு கடிதம்

இஸ்ரேல்: இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா.விற்கு யூத அமைப்புகள் கடிதம் அனுப்பியுள்ளது. உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளை சேர்ந்த 110க்கும் மேற்பட்ட யூத அமைப்புகள் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த கடிதத்தில் ஹமாஸில் கடந்த வாரம் கடத்தப்பட்ட இஸ்ரேலிய பனைய கைதிகளை விடுவிக்க முயற்சிகளை எடுக்க எடுக்க வேண்டும் எனவும் நேரம் செல்ல செல்ல அவர்களுக்கு ஆபத்து அதிகரிப்பதன் காரணமாக சர்வதேச சமூகம் குறிப்பாக ஐ.நா. இதற்கு முன்னுரிமை கொடுத்து மீட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

பெண்கள், குழந்தைகள், வயதானோர் மற்றும் ராணிவ வீரர்கள் ஆகியோர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை மீட்க வேண்டும் என்பது யூத அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது. உலகெங்கிலும் பல நாடுகளில் யூதர்கள் வாழ்ந்து வருகின்றனர். உலக யூத மக்கள் தொகையில் 45-50 சதவீதம் மக்கள் இஸ்ரேலில் வாழ்கின்றனர். இதர யூதர்கள் உலகின் பல நாடுகளில் வாழ்கின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா.விற்கு யூத அமைப்புகள் கடிதம் அனுப்பியுள்ளது. உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளை சேர்ந்த 110க்கும் மேற்பட்ட யூத அமைப்புகள் கடிதம் அனுப்பியுள்ளது. ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் ஐநா உறுப்பு நாடுகளின் தூதர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

The post இஸ்ரேலுக்கு ஆதரவாக உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளைச் சேர்ந்த யூத அமைப்புகள் ஐ.நா.விற்கு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: