திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் 10வது சர்வதேச யோகா தினம்

திருவள்ளூர்: திருவள்ளூர், ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று 10வது சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் ப.விஷ்ணுச்சரண் தலைமை தாங்கினார். முதன்மைச் செயல் அலுவலர் பரணிதரன் வகித்தார். பள்ளி துணை முதல்வர் கவிதா கந்தசாமி அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஹார்ட் புல்னஸ் மெடிடேஷன் ட்ரெயினர் சி.ஆர்.ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகக் கலையினுடைய சிறப்பினை எடுத்துரைத்தார்.

யோகா மனிதனை மனதளவிலும், உடலளவிலும் தூய்மையானவராக மாற்றும் என்பதையும், யோகக்கலை நம் இந்திய தேசத்தின் பாரம்பரியக் கலை என்றும், யோகமே இந்த உலகை ஆட்சி செய்கின்றது என்றும், ஒவ்வொரு தனி மனிதனும் யோகக் கலையை கற்றுக் கொண்டால் மருத்துவம் என்பது தேவையில்லை என்பதைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப் இவ்விழாவினை வழிநடத்தினார். மேலும் ஜோதி, தயாளன் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். முடிவில் தலைமை ஆசிரியர் சுஜாதா நன்றி கூறினார்.

The post திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் 10வது சர்வதேச யோகா தினம் appeared first on Dinakaran.

Related Stories: