இந்திய அணி தேர்வில் தொடரும் சர்ச்சைகள்

புதுடெல்லி: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து வழக்கம் போல் சர்ச்சைகளின் பட்டியல் நீளத் தொடங்கி விட்டன. அவை…..
* ‘யஜ்வேந்திர சாஹல் வேறு எந்த அணிக்காக விளையாடி இருந்தாலும் உலக கோப்பைக்கான 11பேர் கொண்ட ஆடும் அணியிலேயே கட்டாயம் இடம் பிடித்திருப்பார்’ என்று முன்னாள் சுழல் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
* பிசிசிஐ தலைமை தேர்வாளரான அஜித் அகர்கர், தனது ஊரான மும்பையைச் சேர்ந்த 5 வீரர்களுக்கு அணியில் இடம் தந்துள்ளார்.
* 1996ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம் பெறாதது இது 2வது தடவை. மேலும் 2007ம் ஆண்டு தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றிருந்தும், ஒரு ஆட்டத்தில் கூட ஆட வாய்ப்பு கிடைக்கவேயில்லை.
* சுழலுக்கு சாதகமான இந்திய மண்ணில் வேகப்பந்து வீச்சாளர்கள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
* காயத்தில் இருந்து மீண்டும் களம் திரும்பிய கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இன்னும் தங்கள் ஆட்டத்திறனை வெளிப்படுத்தாத நிலையில் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
* வலது கை ஸ்பின்னர்கள் ஜொலிக்கும் 50ஓவர் ஆட்டங்களில், அதுவும் இந்தியாவில் ஒருவர் கூட வலது கை சுழல் பந்து வீச்சாளர்கள் இல்லை.
* ‘கோப்பையை வென்ற 2011ம் ஆண்டு இந்திய அணியில் இருந்த வீரர்களை போன்றவர் யாரும் 2023 இந்திய அணியில் யாரும் நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை’யுவராஜ் சிங் சாடியுள்ளார்.
* ‘அஸ்வின் தொடர்ந்து 50, 20 ஓவர்களுக்கான அணி தேர்வில் இருந்து புறக்கணிப்பது ஆச்சர்யமாக உள்ளது’ என்று பாகிஸ்தான் முன்னாள் நட்சத்திரம் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
* இந்திய தனது முதல் ஆட்டத்தில் ஆஸியை எதிர்கொள்கிறது. சென்னையில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்தப்போட்டியில் ஆல்ரவுண்டர் அஸ்வின் இல்லை.
* சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறும் ஆஸிக்கு சென்னையையும், இங்கிலாந்து லக்னோவையும், தென் ஆப்ரிக்காவும் கொல்கத்தாவையும் பிசிசிஐ தேர்வு செய்தது. ஆனால் தேர்வாளர்கள் முக்கிய சுழல் பந்து வீச்சாளர்களான அஸ்வினை, சாஹலை ஓரம் கட்டி உள்ளனர்.
* ஒருநாள் ஆட்டங்களில் பெரிதும் சாதிக்காத சூரியகுமார் யாதவுக்கு பதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காதது தவறு.
* இந்திய அணியுடன் தாமதமாக இணைந்த ராகுல் நேற்று பயிற்சியில் பேட்டிங் பயிற்சியில் மட்டும் ஈடுபட்டார். மருத்துவர்கள் ஆலோசனையின்படி அவர் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடவில்லை.
* ஆசிய கோப்பை லீக் சுற்றில் அனுபவமற்ற அணியியான நேபாளத்துக்கு 230ரன் விட்டுக் கொடுத்த அதே வீரர்களை கொண்ட அணியை உலக கோப்பைக்கு அறிவித்திருப்பது ஆச்சர்த்தின் உச்சம்.
* ஆசிய கோப்பையில் அனுபவ வீரரான வேகம் ஷமியை ஓரம் கட்டி வைத்துள்ள கேப்டன் ரோகித் ஷர்மா, அவரை உலக கோப்பையில் ஒழுங்காக பயன்படுத்துவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

The post இந்திய அணி தேர்வில் தொடரும் சர்ச்சைகள் appeared first on Dinakaran.

Related Stories: