பீகாரில் தாலிபன் ஆட்சியை கொண்டு வர இந்தியா கூட்டணி முயற்சி: உ.பி. முதல்வர் ஆதித்ய நாத் விமர்சனம்

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசுகையில், “முன்பு சட்டத்துறை அமைச்சராக இருந்த ரவி சங்கர் பிரசாத் முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தார். ஆட்சிக்கு வர விரும்பும் காங்கிரசும், இந்தியா கூட்டணியும் முத்தலாக் தடை சட்டத்தை ரத்து செய்ய விரும்புகின்றன.

அப்படி செய்தால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சுதந்திரம் இருக்காது. எப்போதும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் பீகாரில் தாலிபன் ஆட்சியை கொண்டு வர இந்தியா கூட்டணி நினைக்கிறது. பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கான இடஒதுக்கீடுகளை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது” என்றார்.

 

 

The post பீகாரில் தாலிபன் ஆட்சியை கொண்டு வர இந்தியா கூட்டணி முயற்சி: உ.பி. முதல்வர் ஆதித்ய நாத் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: