உலகில் மிக மெல்லிய 15 இன்ச் மேக்புக் ஏர் லேப்டாப் அறிமுகம்: புதிய அம்சங்களுடன் பல சாதனங்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்

கலிபோர்னியா: உலகின் முன்னணி கணினி செல்போன் சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் பல ஆண்டுகளாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மிக்ஸட் ரியாலிட்டி ஹெட்செட்’ பல்வேறு சாதனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடத்தில் உலகளாவிய டெவலப்பர்ஸ் மாநாடு தொடக்க நிகழ்ச்சி ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் துவக்க உரையுடன் தொடங்கியது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் கூடிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் மெய்நிகர் தொழில்நுட்பத்தை கண்முன் கொண்டு வரும் 23 மில்லியன் பிக்சல்களை கொண்டு விஷன் ப்ரோ கேட்ஹியர் அறிமுகம் செய்யப்பட்டது.

ஏ.ஆர் எனப்படும் ஆக்மெண்டட் ரியாலிட்டி மற்றும் வி.ஆர் எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் சென்சார்கள் மாறும் கேமிராக்களை கொண்டு குரல் மற்றும் கை அசைவுகள் மூலம் இயக்க முடியும். குறைந்த எடையில் வியக்க வைக்கும் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை 3,499 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகின் மிக மெல்லிய 15 இன்ச் மேக்புக் ஏர் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது. 6 ஸ்பிக்ர்கள் கொண்ட இதை முழுதாக சார்ஜ் செய்தால் 18 மணி நேரம் பயன்படுத்த முடியும். மேலும், ஐபோன்களில் ஹே சிரி என்பதற்கு பதிலாக இனி சிரி என கூறினாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உலகில் மிக மெல்லிய 15 இன்ச் மேக்புக் ஏர் லேப்டாப் அறிமுகம்: புதிய அம்சங்களுடன் பல சாதனங்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள் appeared first on Dinakaran.

Related Stories: