சென்னை: ராமநாதபுரம், அரியலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள ஒன்றிய அரசு முயற்சி செய்வதாக மதிமுக பொதுச்செயலா் வைகோ தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டே காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தால் புதிதாக அனுமதி பெற்று எந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் அமைக்க முடியாது. ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட கிணறுகள் தொடர்ந்து இயங்குவதை இச்சட்டம் கட்டுப்படுத்தாது. தற்போது 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை -கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி. திட்டமிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள ஒன்றிய அரசு முயற்சி: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.