ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு

தெலங்கானா: ஹைதராபாத் நம்பள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் ஓட்டலுக்கு எதிரே 4மாடி அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த குடியிருப்பின் தரை தளத்தில் ரசாயன கிடங்கு அமைந்துள்ளது. ரசாயன கிடங்கில் பேரல்களில் டீசல் நிரப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் பேரல்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் அந்த குடியிருப்பில் இருந்தவர்கள், ரசாயன கிடங்கில் உள்ளவர்கள் என அனைவரையும் வெளியேற்றிவருகின்றனர். இருப்பினும் தீயானது அடுக்குமாடி குடியிருப்பின் முழுவதும் பரவியது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை அப்பகுதி மக்களோடு மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது. இருப்பினும் ரசாயன கிடங்கில் பணியில் இருந்தவர்கள் குடியிருப்பில் இருந்தவர்கள் என 7 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தால் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தீயானது கட்டுப்படுத்தமுடியாமல் முழுவதும் பரவி வருவதால் தீயணைப்பு துறையினர் தற்போது தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: