உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் நம்ப வைத்து அவர்கள் மூலமாகவும் சுமார் 120 பேரிடம் பணம் வசூலித்தார். இதில் புதுக்கோட்டையில் மட்டும் ரூ. 1.18 கோடி வரை வசூலித்துள்ளார்.சிலருக்கு சில மாதங்கள் லாப தொகை அளித்திருக்கிறார். மேலும் தனியார் விடுதியில் ஒரு விழா நடத்தி 2 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் தங்க நாணயம், எல்இடி டிவி பரிசாக வழங்கப்படும் என்று ஆசை காட்டியிருக்கிறார். சிலருக்கு தங்க நாணயம், டிவி பரிசளித்திருக்கிறார். இதனால் ஏராளமானோர் பணம் செலுத்தியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் வெங்கடேஷ் குமார் முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தொகை தரவில்லை. அலுவலகத்தையும் மூடிவிட்டார். இது குறித்து முதலீடு செய்தவர்கள் கேட்டதற்கு, அவர் கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் அளித்தனர். மேலும் பல்வேறு காவல் நிலையங்களிலும் எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேஷ்குமாரை தேடி வந்தனர். திருச்சியில் பதுங்கியிருந்த அவரை நேற்று கைது செய்தனர்.
The post அதிக வட்டி ஆசை காட்டி பல கோடி சுருட்டிய வாலிபர்: திருச்சியில் பிடிபட்டார் appeared first on Dinakaran.