சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை நியமித்து குடியரசுத்தலைவர் நேற்று உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா கடந்த 24ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.வி.கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். 1962 மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த வர் கங்காபூர்வாலா. 1985ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 2010ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார். அடுத்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி நீதிபதி கங்காபூர்வாலா ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: