அதன் அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தம், நீக்கம், சேர்க்கை விவரங்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர்நிலைக் குழுவின் பரிந்துரையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு உத்தேச முன்னுரிமை பெயர் பட்டியலில் உள்ள ஆசிரியர்களில் 4 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதிபெற்றவர்கள் எவரேனும் இருந்தால் அதன் விவரங்களை ஆய்வு செய்து உரிய ஆவணங்களுடன் பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கிடையே தற்போதைய அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 2005-06ல் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.
அதில் மாற்றம் செய்து 2006-07, 2007-08, 2008-09ம் கல்வியாண்டுகளில் முதுநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் எவரேனும் 4 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி பெற்றிருப்பின் அதுகுறித்த விவரங்களையும் ஆய்வு செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 4% இடஒதுக்கீட்டில் தகுதி பெற்றவர்கள் யார், யார்? விவரம் கேட்கிறது பள்ளிக்கல்வித்துறை appeared first on Dinakaran.
