ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் யாகம்

திருமலை: தெலங்கானாவில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முதல்வர் சந்திரசேகரராவ் யாகத்தை தொடங்கி உள்ளார். இந்த யாகம் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. தெலங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 30ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற தெலங்கானா மாநிலம், சித்திப்பேட்டை மாவட்டம் மார்கூக் அடுத்த எர்ரவள்ளியில் முதல்வர் சந்திரசேகரராவ் (கேசிஆர்) தனக்கு சொந்தமான விவசாய பண்ணையில் ராஜ்ஷ்யமாலா யாகத்தை நேற்று தொடங்கினார். விசாகப்பட்டினம் சாரதா பீடாதிபதி ஸ்வரூபானந்தேந்திர சுவாமி மேற்பார்வையில் 5 நாட்கள் யாகம் நடைபெற உள்ளது. இதில், ஆந்திரா மற்றும் கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களை சேர்ந்த 200 வேத பண்டிதர்களுடன் யாகம் நடத்தி வருகின்றனர். 2ம் நாளான இன்று வேத பாராயணத்துடனும், கடைசி நாளான ஹோமத்தன்று பூர்ணாஹூதியுடனும் யாகம் நிறைவடையும். தேர்தலுக்கு முன் ராஜ்ஷ்யமாலா யாகம் நடத்துவதை முதல்வர் சந்திரசேகரராவ் சில காலமாக சென்டிமென்டாக செய்து வருகிறார்.

The post ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் யாகம் appeared first on Dinakaran.

Related Stories: