சென்னை: ஜூலை 12-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நுழைவுச்சீட்டு tnpsc.gov.in மற்றும் tnpscexams.in இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஜூலை 12 ம் தேதி ஒ.எம்.ஆர். முறையில் தேர்வு நடைபெறுகிறது. ஜூலை 12 காலை 9.30 முதல் 12.30 வரை டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 4 தேர்வு மூலம் 25 வகையான 3,935 பணியிடங்களை நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.
The post ஜூலை 12-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.
