ஆளுநருக்கு வேலை இல்லாததால் அடிக்கடி டெல்லி செல்கிறார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

திருச்சி: ‘ஆளுநருக்கு வேலை இல்லாததால் அடிக்கடி டெல்லி செல்கிறார்’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள உடையார் கோயிலில் திமுக நிர்வாகிகள் இல்லத்திருமண விழா நேற்று நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி மணமக்களை வாழ்த்தினார். திருமணத்தை முடித்துக்கொண்டு சென்னை செல்வதற்காக திருச்சி வந்தார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் மேட்டூரிலிருந்து சரியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்திடம் பேசி தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை பெற்று தர தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். யார் யாருக்கு அடிமை என்பது மக்களுக்கு தெரியும். அதிமுக தான் பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறது. எங்களுடைய தலைவர் கலைஞரும், இன்றைய தலைவர் ஸ்டாலினும் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை. பயந்ததும் இல்லை. தமிழ்நாடு ஆளுநர், வேறு வேலை எதுவும் இல்லாததால் அடிக்கடி டெல்லி சென்று வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆளுநருக்கு வேலை இல்லாததால் அடிக்கடி டெல்லி செல்கிறார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: