இந்தச் சட்டம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக உள்ளது. காவிரி டெல்டா உள்ளிட்ட விவசாயிகளின் உரிமைகள், வாழ்வாதார உரிமை மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சட்டமாக உள்ளது. எனவே, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம், 2023ஐ ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர், ‘‘இந்த சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என எவ்வாறு கூறுகிறீர்கள்? இது அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையது. எந்த அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிடாமல், நிவாரணத்தை வழங்க இயலாது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எளிதாக ரத்து செய்ய முடியாது. பாதிப்பு ஏற்பட்டால், அரசிடம் மனு அளிக்கலாம்’’ என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
The post இது அரசின் கொள்கை முடிவு நில ஒருங்கிணைப்பு சட்டம் ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி appeared first on Dinakaran.
