தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தலைமைக் பேச்சாளர்கள் குமரி பிரபாகரன் சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் அதன் பயன்கள் மேலும், இளைஞர் நலன் காக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்து வரும் திட்டங்கள், கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினர்.இந்த கூட்டத்தில் இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல்மாலிக், வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய செயலாளர் சேகர், பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லி தர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய்காந்தி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, திமுக நிர்வாகிகள் மற்றும் அணிகளை சார்ந்த திமுக நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
The post அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ சுந்தர் வழங்கினார் appeared first on Dinakaran.
