அரசு பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய போதை ஆசாமி: வீடியோ வைரல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கொரக்கம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் குரு. கூலி தொழிலாளி. இவர் நேற்று மது போதையில் பேரம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கிச் சென்ற அரசு பேருந்து, கூவம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது, பேருந்தின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, பேருந்தை இங்கிருந்து எடுக்கக் கூடாது என பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஓட்டுநர் குறுக்கே இருந்த இருசக்கர வாகனத்தை இடிக்காமல், இடது புறமாக பேருந்தை எடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த குரு, அருகே இருந்த கட்டையை எடுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடி, ஓட்டுனர் இருக்கை அருகே இருந்த கண்ணாடி, பின்பக்க கண்ணாடி, பக்கவாட்டு கண்ணாடி என அனைத்து கண்ணாடிகளையும் அடித்து உடைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மது போதையில் குரு அரசு பேருந்தை அடித்து உடைக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அரசு கண்ணாடிகளை அடித்து உடைத்த, மது போதை நபர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

The post அரசு பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய போதை ஆசாமி: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: