உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

 

தர்மபுரி, ஆக.28: பாலக்கோடு அருந்ததியர் தெருவில் ஊர் மாரியம்மன் கோயிலில், திருவிளக்கு பூஜை மற்றும் வரலட்சுமி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர் மாரியம்மன் கோயிலில் ஒன்று கூடி திருவிளக்கு பூஜை மற்றும் வரலட்சுமி பூஜை செய்தனர். பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், குழந்தைகள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழவும், உலக நன்மை வேண்டியும் 1008 மந்திரங்கள் கூறி பூஜை செய்து, அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

The post உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: