பாடப்புத்தகங்களை ஆர்வமுடன் காட்டும் மாணவர்கள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா

 

ஜெயங்கொண்டம். ஜூன்11: ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடியிருப்பு மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேக திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் தொடங்கியது.

மூன்று கால யாகசாலை பூஜை, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பூர்ணாகுதி செய்யப்பட்டு ஓமம் நிறைவு செய்யப்பட்டது. தொடர்ந்து கிராம முக்கியஸ்தர்கள் தலைமையில் கடம் புறப்பாடு செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்றினர். கோவில் கலசத்திற்கு ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் மகா காளியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், ஊர் முக்கியஸ்தர்கள், கவுன்சிலர்கள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post பாடப்புத்தகங்களை ஆர்வமுடன் காட்டும் மாணவர்கள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா appeared first on Dinakaran.

Related Stories: