கோ பர்ஸ்ட் நிறுவன திவால் மனு கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் ஏற்பு

புதுடெல்லி: கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் திவால் மனுவை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் ஏற்று உள்ளது. தனியார் விமான நிறுவனம் கோ பர்ஸ்ட் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.கோ பர்ஸ்ட் நிறுவனத்திடம் 57 விமானங்கள் உள்ளன. தற்போது அதன் 25 விமானங்கள் செயல்படாமல் உள்ளன. ஊழியர்களுக்கு ஊதியம், விமான நிலையங்களுக்கான கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கிறது. இந்தசூழலில் இந்த நிறுவனம் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு தானாக முன்வந்து மனு அளித்திருந்தது.

இந்த மனு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ராமலிங்கம் சுதாகர், எல்.என்.குப்தா அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள்,இந்த நிறுவனத்தின் திவால் மனுவை ஏற்று கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே போல் நிர்வாக குழு சஸ்பெண்ட் செய்யப்பட்டு அபிலாஷ் லால் நிர்வாகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளது. கடந்த 3 ம் தேதி முதல் கோ பர்ஸ்ட் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 19ம் தேதி வரை விமான சேவையை நிறுத்துவதாகவும், டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

The post கோ பர்ஸ்ட் நிறுவன திவால் மனு கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: