காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை கர்நாடகா உடனே நிறைவேற்ற ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை கர்நாடகா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.ேக.வாசன் வலியுறுத்தியுள்ளார்.தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தொடர்ந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. கர்நாடகா அரசு பரிந்துரையை ஏற்று தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

காவிரி பிரச்னையில் கர்நாடகா அரசால் தமிழ்நாட்டு விவசாயிகள் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறார்கள். இதனால் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகள் தான் பாதிக்கப்படுகிறார்கள். டெல்லியில் காணொலியின் மூலம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவை கர்நாடகா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை கர்நாடகா உடனே நிறைவேற்ற ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: