சென்னை: கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்திய தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கை வழக்கறிஞர்கள் வாதத்துக்காக செப்டம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி சாட்சியத்தை பதிவு செய்த வழக்கறிஞர் ஆணையர் கார்த்திகை பாலன் அறிக்கை தாக்கல் செய்தார்.