இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று கவலை தெரிவித்துள்ள ஐ.நா. மனிதாபிமான உதவிகள் வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இதற்காக ஐ.நா.வில் ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானத்தில் காசாவில் முடக்கப்பட்டுள்ள உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்குவதற்கான அவசர தேவையை உணர்ந்து, மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 120 நாடுகள் ஆதரவாகவும் 14 நாடுகள் எதிராகவும் இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் தவிர்ந்தன.இதையடுத்து இந்த தீர்மானம் ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானம் வெறுக்கத்தக்க வகையில் இருப்பதாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
The post காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்.. 120 நாடுகள் ஆதரவு!! appeared first on Dinakaran.
