ஊட்டி: காற்றில் சாய்ந்த பூண்டு செடிகளை நிமிர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதில், ஏமரால்டு, நஞ்நாடு, கப்பத்தொரை, இத்தலார், முத்தோரை உள்ளிட்ட பகுதிகள், மாவட்டத்தின் வேறு சில பகுதிகளிலும் பயிரிடப்பட்டிருந்த பூண்டு செடிகள் காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்காமல் தரையில் சாய்ந்து விழுந்தன.
இதனால், தரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பூண்டு செடிகள் பாதிக்காமல் இருக்க அவைகளை சரி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தரையில் விழுந்த பூண்டு செடிகளை ஒன்றிணைத்து அதனை கயிறு மூலம் கட்டி நிமிர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
The post காற்றில் சாய்ந்த பூண்டு செடிகள்: நிமிர்த்தும் பணியில் விவசாயிகள் appeared first on Dinakaran.