கங்காசாகர் திருவிழா 65 லட்சம் பேர் புனித நீராடல்

கங்காசாகர்: மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தியையொட்டி கங்காசாகர் திருவிழா நடக்கும்.இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து கங்கை நதி மற்றும் வங்காள விரிகுடா சங்கமத்தில் புனித நீராடுவர்கள். அதை தொடர்ந்து சாகர் தீவில் உள்ள கபிலர் முனி கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். கங்காசாகர் திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் லட்சக்கணக்கானோர் கோயிலுக்கு வந்தனர்.

இன்று மகரசங்கராந்தி பண்டிகை நடைபெறுவதையொட்டி,தேசிய பேரிடர் மீட்பு புடை, கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இது பற்றி மாநில அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் கூறும்போது,‘‘திருவிழா தொடங்கியதில் இருந்து நேற்று மதியம் வரை 65 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

 

The post கங்காசாகர் திருவிழா 65 லட்சம் பேர் புனித நீராடல் appeared first on Dinakaran.

Related Stories: