கடசோலை அரசு பள்ளியில் பழங்குடியினர் தின விழா

ஊட்டி : கோத்தகிரி அருகேயுள்ள கடசோலை அரசு பள்ளியில் பழங்குடியினர் தின விழா நடந்தது.ஊட்டி அருகே கடசோலை கிராமம் உள்ளது. இங்கு அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான பழங்குடியின மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில்,உலக பழங்குடியினர் தின விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தாமரை செல்வி, அனைத்து குழந்தைகளுக்கும் பேனா, பென்சில்கள், பிஸ்கட்டுகள், இனிப்புகள் வழங்கி குழந்தைகளை சிறப்பித்தார்.முன்னதாக நடைபெற்ற குழந்தைகளின் பழங்குடியினர் நடனத்தில் பங்கு கொண்டார்.

நீலகிரி தொல் பழங்குடியின மக்கள் வகைப்பாடு,வாழ்வு முறை,பண்பாடு பற்றி உதவி ஆசிரியர் ராஜேந்திரன் விளக்கி கூறினார்.பின்னர், பழங்குடியினர் குழந்தைகள் வசிக்கும் குடியிருப்புகளான செடிக்கல்,பாம்பரை, சேலரை குடியிருப்புகளுக்கு தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் வழிகாட்டலில் நேரடி களப் பார்வையிட்டு, குரும்பர் மற்றும் இருளர் ஆதிவாசி மக்களின் வாழ்வு முறை,பொருளாதார மேம்பாடு,கல்வி,விவசாயம், அடிப்படை வசதிகள்,வனவிலங்கு பாதுகாப்பு குறித்து ஊர் பெரியோர்களிடம் கேட்டறிந்தனர்.

நீண்ட நாட்கள் வருகை புரியாத குழந்தைகள்,பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்கும் குழந்தைகளின் காரணங்கள் கேட்டறிந்து அத்தகைய குழந்தைகளை பள்ளிக்கு தொடர்ந்து அனுப்ப கேட்டு கொண்டார். இறுதியில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிப்பை முடித்து மேலும் படிப்பை தொடராத அனிதா முதலான குரும்பர் இன குழந்தைகள் தங்கள் படிப்பை ஆசிரியர் படிப்பு உள்ளிட்ட உயர் கல்வியைத் தொடர தேவையான உதவிகளை தாங்கள் செய்வதாக ஆசிரியர்கள் உறுதி கூறினர்.

அத்தோடு பழங்குடியின பள்ளி குழந்தைகளுக்கு தேவையான சாதி சான்றிதழ்கள் பெற்று தருதல், பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் அரசின் உதவித் தொகை, விபத்தில் இறந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு அரசின் ரூ.75,000 நிதி உதவி, அரசின் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொள்ள செய்தல், ஆதார் முகாம் அமைக்க செய்யப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

The post கடசோலை அரசு பள்ளியில் பழங்குடியினர் தின விழா appeared first on Dinakaran.

Related Stories: