ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் களமிறங்கிய இத்தாலி வீரர் யானிக் சின்னர் (22 வயது, 2வது ரேங்க்) 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் பவெல் கொடோவை (25 வயது, 56வது ரேங்க்) வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு 3வது சுற்றில் ரஷ்ய நட்சத்திரம் ஆந்த்ரே ருப்லேவ் (26 வயது, 6வது ரேங்க்) 6-7 (6-8), 2-6, 4-6 என்ற நேர் செட்களில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியிடம் (23 வயது, 35வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் தமிழக வீரர் என்.எஸ்.பாலாஜி – எம்.ஏ.வரேலா மார்ட்டின்ஸ் (மெக்சிகோ) இணை நேற்று 6-3, 6-4 என நேர் செட்களில் ரீஸ் ஸ்டல்டெர் (அமெரிக்கா) – செம் வெர்பீக் (நெதர்லாந்து) இணையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.
The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றில் கோகோ காஃப் appeared first on Dinakaran.