ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை முதல் அரையிறுதியில் இன்று ஆஸி. – தென் ஆப்ரிக்கா மோதல்

துபாய்: ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்.3ல் தொடங்கிய இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஏ பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா (8 புள்ளி), நியூசிலாந்து (6 புள்ளி) அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இந்தியா (4), பாகிஸ்தான் (2), இலங்கை (0) அணிகள் ஏமாற்றத்துடன் வெளியேறின. பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் தலா 6 புள்ளிகள் பெற்ற நிலையில், மொத்த ரன்ரேட் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் (ரன்ரேட் 1.536), தென் ஆப்ரிக்கா (1.382) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இங்கிலாந்து (1.091), வங்கதேசம் (2 புள்ளி), ஸ்காட்லாந்து (0) அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில், துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று இரவு 7.30க்கு தொடங்கும் முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை நடத்துகிறது. நாளை நடைபெறும் 2வது அரையிறுதியில் நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும். சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டி துபாயில் அக்.20ம் தேதி நடைபெற உள்ளது.

The post ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை முதல் அரையிறுதியில் இன்று ஆஸி. – தென் ஆப்ரிக்கா மோதல் appeared first on Dinakaran.

Related Stories: