சில்லி பாயின்ட்…

* வங்கதேசம் – தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் மிர்பூரில் அக்.21ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காலித் அகமது நீக்கப்பட்டுள்ளார். வங்கதேசம்: நஜ்முல் உசைன் ஷான்டோ (கேப்டன்), ஷத்மன் இஸ்லாம், மகமதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரகிம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஜேகர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், தஸ்கின் அகமது, ஜசன் முகமது, நஹித் ராணா.

* கோ கோ உலக கோப்பை 2025 தொடர் டெல்லியில் ஜன.13-19 வரை நடைபெற உள்ளது. ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் 24 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான லோகோ டெல்லியில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

* அலஸ்டர் குக் (இங்கிலாந்து), நீத்து டேவிட் (இந்திய மகளிர் அணி ஸ்பின்னர்), டி வில்லியர்ஸ் (தென் ஆப்ரிக்கா) ஆகியோருக்கு ‘ஐசிசி ஹால் ஆப் ஃபேம்’ கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
* மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரஸ் மாம்ப்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.

* அபு தாபி டி10 தொடரில் (நவ.21 – டிச.2) விளையாட ரஷித் கான், ஜாஸ் பட்லர், தினேஷ் கார்த்திக், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒப்பந்தமாகி உள்ளனர். இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

* இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே நடந்து வரும் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி தம்புல்லாவில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து பல்லெகெலேவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: